நாளை ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீ்ட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – பரீட்சைத்திணைக்களம்!

நாளை (02) ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீ்ட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சை 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் நாளை 2 ஆம் திகதி முதல் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். பரீட்சார்த்திகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பிலும் அவர் தெளிபடுத்திள்ளார்.
பரீட்சை மு.ப 8.30 ஆரம்பமாகுவதால் பரீட்சார்த்திகளை மு.ப.8.00 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபத்திற்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார். பரீட்சார்த்திகள் பரீட்சை அனுமதிப்பதிரம்,தேசிய அடையாளஅட்டை அல்லது கடவுச்சீட்டினை பரீட்சை மண்டபத்திற்குள் கட்டாயம் எடுத்துவருதல் வேண்டும்.
இம்முறை க.பொ.த உயர் தரப்பரீட்சையில் 3,15,605 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 2,40,991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74,614 வெளிவாரி பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிக்காட்டினர்.
Related posts:
|
|