நாளை அவசரமாக கூடுகின்றது அரசியலமைப்புப் பேரவை – பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்படும் என எதிர்பார்ப்பு!

Wednesday, April 22nd, 2020

பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஏற்பட்டுள் சிக்கல் நிலைமைழைய அவதானத்தில் கொண்டு பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டும் வகையில் அரசியலமைப்புப் பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை அடுத்து பொதுத் தேர்தல் நடத்தப்படுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் பழைய நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நிதி அதிகாரம் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் கூறி வருகின்ற நிலையில் பழைய நாடாளுமன்றத்தை கூட்டப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்.

இதையடுத்து தீர்மானம் ஒன்றினை எடுக்கும் விதத்தில் நாளையதினம் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் அரசியல் அமைப்பு பேரவை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடவுள்ளதாக அறியமுடிகின்றது.

இக் கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது;

.

Related posts: