நாளைய மின் தடை பற்றிய அறிவித்தல்!

Friday, October 28th, 2016

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டில் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமையும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் வட மாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை தெல்லிப்பழை சந்தை வீதி, தெல்லிப்பழை ஆஸ்பத்திரி வீதி, தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை, தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை ஆகிய இடங்களிலும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், சோளாவத்தை, அராலி வீதியின் ஒரு பகுதி, புங்குடுதீவு ஆஸ்பத்திரி வீதி, கரைநகர் வீதி சந்தியிலிருந்து கே.கே.எஸ்.வீதி சந்திவரை, சீனிவாசகம் வீதி, சிவன்பண்ணை வீதியின் ஒரு பகுதி, கே.கே.எஸ்.வீதி துரையப்பா விளையாட்டு அரங்கில் சத்திரத்துசந்தி வரை, சப்பல் வீதி, யாழ் 1ஆம், 2ஆம் ,3ஆம், 4ஆம் குறுக்குத் தெருக்கள் வேம்படி வீதி சந்திவரை, பிரதான வீதி துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து விஜிதா கபே வரை, மாவடி, மூளாய், வட்டுக்கோட்டை, அராலி, மண்கும்பான் தேசிய நீர்வழங்கல் வடிகால்சபை, மண்கும்பான் கடற்படை முகாம், மண்டை தீவு வெலுசுமன இலங்கை கடற்படை முகாம், புங்குடுதீவு இலங்கை கடற்படை முகாம், யாழ்.சிறைச்சாலை, யாழ்பொலிஸ் நிலையம், யாழ் துரையப்பா விளையாட்டரங்கு, இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், யாழ்.பொது நூலகம், மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி, தேசிய நீர்வழங்கல் வடிகால்சபையின் பிராந்திய முகாமையாளர் அலுவலகம், இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப்பொது முகாமையாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

1-Copy5-620x336

Related posts: