நாளையும் இரண்டே கால் மணிநேரம் மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 16th, 2022

இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: