நாளையதினம் நாடு முழுவதுமுள்ள LIOC எரிபொருள் நிலையங்களை மூட ஆலோசனை!

Friday, July 8th, 2022

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (எல்ஐஓசி) திருகோணமலையில் உள்ள பெட்ரோலிய முனையத்தையும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் நாளை (9) மூட வாய்ப்புள்ளதாக எல்ஐஓசி நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தமது முனையம் மற்றும் எரிபொருள் நிலையங்களை மூடுவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்கும் அதே வேளையில் LIOC தற்போது தனியார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: