நாளைமுதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வீதி விபத்துக்களைத் தவிர்த்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் நாளை(15) முதல் ஜனவரி 5ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் பிரகாரம் விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாதுகாப்பு செயலர் - பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர்சந்திப்பு!
போக்குவரத்து விதி மீறல்களில் புதிய மாற்றம்!
உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகிறேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
|
|