நாளைமுதல் வழமைக்கு திரும்பும் கொழும்பு – மேல் மாகாணத்தை விட்டு வெளியேற அனுமதி – கொரோனா பரவலை தடுக்கும் தேசிய மையம் தெரிவிப்பு!
Sunday, November 15th, 2020மேல் மாகாணத்திற்கு வெளியே பயணிப்பதற்கு தடை செய்து அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படுவதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று நள்ளிரவின் பின்னர் வழமையை போன்று மேல் மாகாணத்திற்கு வெளியே பயணிக்க முடியும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள 12 பொலிஸ் பிரிவிற்கு மேலதிகமாக மேலும் சில பிரதேசங்கள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனிதெரு மற்றும் வேல்லவீதிய ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கம்பஹா மாவட்டத்தில் களனி பொலிஸ் பிரிவு நாளை முதல் தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்த பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நீர்கொழும்பு, ஜாஎல, ராகம, கடவத்தை, வத்தளை, பேலியகொட, களனி ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் அவ்வாறே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் இன்றைய தினம் முதல் அந்த நிலைமையில் இருந்து விடுவிக்கப்படும் என கூறியுள்ளார்.
அதற்கமைய குருநாகல் மாவட்டத்தின் நகர சபை எல்லை, குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் களுத்துறை மாவட்டத்தில் ஹொரன, இங்கிரிய, வேகட ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவடடத்தின் ருவன்வெல்ல மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேசத்தில் இன்றைய தினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|