நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி ஆரம்பம் – யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Friday, January 29th, 2021

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இரண்டாயிரத்து 300 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கோரப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக அதனை இன்று பெற்றுக்கொள்ள ஏஙற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பு மருந்து இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இந்தத் தடுப்பூசியின் 5 இலட்சம் மருந்துகள் இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஏற்றும் பணி இன்று மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

எமது மக்களின் வளமான எதிர்காலம் பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும் - சிவகுருபாலகிருஷ்ணன்
நாட்டுக்கு எது உகந்தது என சிந்தித்து தலைவர்கள் செயற்பட வேண்டும் - நீதி அமைச்சர்அலி சப்றி சுட்டிக்காட...
ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பில் இலங்கைய...