நாளைமுதல் நாடாளவிய ரீதியில் தினமும் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

Saturday, June 6th, 2020

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளைமுதல் நாடாளவிய ரீதியில் தினமும் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

மறு அறிவிப்பு வரை இந்த நடைமுறை தொடரும் என வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் வார இறுதி நாட்களில் முழு நாளும், ஏனைய நாட்களில் இரவு பத்து மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: