நாளைமுதல் அனைத்து பொதுச் சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவிப்பு!
Thursday, September 30th, 2021நாளை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதால், அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொதுச் சேவையை வழமை போன்று முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இணையவழி காணொளி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ள தற்போதைய சந்தர்ப்பத்தில், அரச சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அத்தியாவசிய அரச சேவைகளுக்கு அதிக முக்கியத்துவமளித்து, பொது சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடவுள்ளதாகவும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளார்.
.
Related posts:
|
|