நாளுக்கு நாள் மாற்றமடைந்து வரும் கொரோனா தொற்று – தீர்மானிக்க முடியாதுள்ளது என்கிறார் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்!

Friday, April 17th, 2020

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருவதால், அது தொடர்பாக உடனடியாக எதுவித தீர்மானத்தையும் எடுக்க முடியாது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை நீக்க முடியுமா என்பது குறித்து அடுத்த சில தினங்களில் தீர்மானிக்க முடியும் என்ற போதிலும் அவரசரமாக தீர்மானங்களை எடுத்தால், மீண்டும் ஆரம்ப நிலைமைக்கு செல்ல நேரிடும் அல்லது நிலைமை மோசமாக மாறவும் வாய்ப்புள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தொடர்ந்தும் இந்த கொரோனா வைரஸின் மாற்றங்களை ஆராய வேண்டும். ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளுடன் பழகியவர்களே தற்பொழுது அடையாளம காணப்பட்டு வருகின்றனர்.

அதிகளவானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நோய் அறிகுறிகள் தென்படும் முன்னர் தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காணமுடியும் எனவும் மருத்துவர் சுதத் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: