நாளாந்தம் 38 மில்லியன் நட்டத்தை எதிர்கொள்ளும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Monday, April 2nd, 2018

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துச் செல்வதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்தம் 38 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துச் செல்கின்ற போதும் இலங்கையில் ஒரே மட்டத்தில் எரிபொருளின் விலையை பேணுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதனாலேயேஇவ்வாறான நட்டம் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கேற்ப ஐ.ஓ.சி நிறுவனம் அண்மையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்திருந்தது.  எனினும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருட்களின் விலைஅதிகரிக்கப்படவில்லை.

இதனால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக எண்ணிக்கையான நுகர்வோர் எரிபொருளை கொள்வனவு செய்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப விலை சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: