நாரந்தனை தெற்கு அண்ணாவீதியை புனரமைத்து தருமாறு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

நாரந்தனை தெற்கு அண்ணாவீதியை புனரமைத்து தருமாறு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாது குன்றும் குழியுமாக காணப்படும் தமது அண்ணா வீதியை தமது போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தும் போது தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்த மக்கள் தமது அசௌகரியங்களை கருத்தில் கொண்டு குறித்த வீதியை புனரமைத்து தருமாறும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளரும் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளருமான ஜெயகாந்தனிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
மக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்ற தவிசாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட குழுவினர் வீதியின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டதுடன் குறித்த வீதியின் பாதிப்புக்களையும் மக்களது தேவைப்பாட்டையும் அறிந்துகொண்டதற்கிணங்க தற்காலிகமாக சிறிது புனரமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதுடன் விரைவில் குறித்த வீதியை முழுமையாக சீரமைத்து தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்
இதன்போது ஊர்காவற்றுறை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் புவி உடனிருந்தார்.
Related posts:
|
|