நாம் மத்திய வங்கியை கொள்ளையடிக்கவில்லை – எமது அரசு தான் ஊழலுக்கு எதிரான அரசு – அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ நாடாளுமன்றில் தெரிவிப்பு!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சி ஒரு ஊழல் அற்ற ஆட்சி என பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சவால்களை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். ஆனால் நாம் சோர்ந்து போகவில்லை. கடந்த ஆட்சியில் பல கடன்கள் பெறப்பட்டது. அதனை எமது அரசாங்கமே செலுத்துகிறது.
நீங்கள் எங்கள் மீது சேறு பூச வேண்டாம். நான்கு கிலோ மீற்றர் வீதி அமைப்பதற்கு பல கோடி ரூபாய் கொள்ளையடித்தவர்களை எமக்கு தெரியும்.
மிடுகவ – கடுவத்த வீதி தங்கத்திலா அமைத்தீர்கள். அதேபோன்று எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சிறுபிள்ளை போல பேசி வருகின்றார்.
அவரின் பேச்சு முட்டாள் தனமானது. எமது அரசு தான் ஊழலுக்கு எதிரான அரசு. நாம் ஒன்றும் மத்திய வங்கியை கொள்ளையடிக்கவில்லை.
ஜனாதிபதி மனிதாபிமானமாக செயற்பட்டு வருகின்றார். நீங்கள் சண்டித்தனத்துக்கு அழைகின்றீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|