நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வெற்றிபெறச் செய்வோம் – வவுனியா வேட்பாளர் சத்தியசீலன்

Monday, January 22nd, 2018

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகள் இன்றும் தமது நாளாந்த வாழ்வுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களது வாழ்வை உறுதிசெய்யக்கூடியதான தகுதியை  கொண்டிருப்பவராக நாங்கள் டக்ளஸ் தேவானந்தாவை அவர்களை பார்க்கிறோம் என கட்சியின் ஓயார் சின்னக்குளம் வட்டார வேட்பாளர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஓயா சின்னக்களத்தில் பகுதியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தேர்தல் காலங்களில் மட்டு எம்மிடம் வீடுதேடிவந்து வாக்குக் கேட்பவர்கள் வாக்குகளைப் பெற்ற வெற்றியை தமதாக்கிக் கொண்டதும் வாக்களித்த எம்மையும் எமது கோரிக்கைகளையும் மறந்துவிடுவார்கள்.

கடந்தகால தேர்தல் காலங்களின்போது எம்மிடம் வந்து வாக்குக் கேட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டங்களை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்று வாக்குறுதி வழங்கியிருந்தார்கள்.அந்த வாக்குறுதிளை நம்பியே நாமும் அவர்களுக்கு வாக்களித்திருந்தோம்.

ஆனால் அந்த அரசியல் வாதிகள் எமக்கான தேவைகளை நிறைவு செய்யடியாத சயநலப் போக்கடனேயே இன்றும் காணப்படுபகின்டுகின்றனர்.

எனவேதான் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக மட்டுமன்றி எமது தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய தலைமையாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை இம்முறை ஆதரிக்கின்றோம் என்றும் அந்தவகையில்தான் அந்த கட்சியின் வேட்பாளராக போட்டியடுன்றேன் என்றும் சத்தியசிலன் தெரிவித்தார்.

Related posts: