நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் திருமலை மனையாவெளி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, November 19th, 2016

நீண்டகாலமாக தாம் எதிர்கொண்டுவரும் கடல் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு திருகோணமலை மனையாவெளி சண்டிபே கடற்றொழிலாளர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாட்டப் பிரதிநிதி புஸ்பராசாவிடமே குறித்த பகுதி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் குறித்த பகுதிக்கு சென்று  அங்குவாழும் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட புஸ்பராசா அவர்களிடம் அப்பகுதி கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் மாத்தூன் பெர்னாண்டோ தமது பகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக எடுத்துரைத்துள்ளார். மேலும் குறித்த பகுதி கடற்றொழிலாளர்களால் வாழ்வாதார  தேவைகள் தொடர்பாகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

012

குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும்  எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக கட்சியின் பிரதிநிதி புஸ்பராச தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2000ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து குறித்த மீனவர்சங்க கட்டடத்தை கட்டுவதற்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடதத்தக்கது.

 013

Related posts: