நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது சிறந்த சேவையை செய்திருக்கின்றோம்!

23 Monday, May 8th, 2017

“பனை அபிவிருத்திச் சபையைபொறுப் பேற்றிருந்த போது டக்ளசும்  அவரது சகாக்களும் பெருமளவு நிதியைக் கையாடியுள்ளனர்”என்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை இன்றையதினம் (08.05.2017) செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தது.

அந்தச் செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வரணி வடக்கு பனைவள உற்பத்திநிலையத்தில் பனை, தென்னை உற்பத்தி தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ன கூறினார் என்பதை அப்படியே இந்தப் பத்திரிகை பிரசுரித்திருக்கும் என்பது சந்தேகமே. ஏன் என்றால் குறித்த பத்திரிகையானது மக்களுக்கு உண்மையைக் கூறும் பத்திரிகையாக செயற்படுவதில்லை என்பதும், அப்பத்திரிகை மோசடியாக திரட்டப்பட்ட நிதியைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒருநேர்மையற்ற அரசியல்வாதியின் வழிகாட்டலில் இயங்குகின்ற செத்தவீட்டுப் பத்திரிகை என்பதும் யாழ்ப்பாண மக்களுக்கு நன்குதெரியும்.

எனவே ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் மீது அவதூறு சுமத்தும் குறுகியநோக்கத்துடன் வெளியாகியிருக்கும் அந்தச் செய்திகுறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இருந்தபோதும்,முன்னைய ஆட்சியில் எமது செயலாளர் நாயகம் அவர்கள் அமைச்சராக இருந்தபோது அந்த அமைச்சின் கீழேயே பனை அபிவிருத்திச் சபையும் இருந்தது என்பதையும், அதைப் பொறுப்பேற்று நாம் ஆற்றிய ஈடற்ற அர்ப்பணிப்புக்கள் தெடர்பாகவும் சுருக்கமாக தெளிவுபடுத்துவதற்கு இந்தச் செய்தி ஒரு வாய்ப்பைக் கொடுத்திருப்பதாகவே கருதுகின்றோம்.

பனை அபிவிருத்திச் சபையை நாம் பொறுப்பேற்று நடத்தியபோது, பனைவளத்தை நம்பிவாழும் அனைத்து மக்களின் நலன் தொடர்பாகவும் அக்கறையோடு திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். சீவல் தொழிலாளர்களுக்கு நூற்றுக்கணக்கான துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக்கொடுத்ததுடன்,அவர்களுக்குதொழில் உபகரணங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தோம். இவற்றுக்கெல்லாம் மேலாக தொழிலை ஆரம்பிப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காக நிதிஉதவியைவழங்கியிருக்கின்றோம்.

 சீவல் தொழிலாளர்களுக்கு காப்புறுதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம். குறிப்பாக யுத்தத்தினால் அழிக்கப்பட்ட பனைமரங்களுக்கு பதிலாக ஆயிரக்கணக்கான பனைவிதைகளை எமது தாயகப் பகுதியெங்கும் நடுகை செய்தும். அழிவடைந்த நிலையிலிருந்த திக்கம் வடிசாலையை மீண்டும் உற்பத்திகளை மேற்கொள்வதற்கான நிறுவனமாக புனரமைத்தும்.  உற்பத்திகள் நடைபெறும்வரை திக்கம் வடிசாலையில் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு மனிதாபிமானரீதியில் கட்சி நிதியிலிருந்து உதவிகள் செய்தும். பனை வளத்தை நம்பிவாழும் மக்களுக்கு அளப்பரிய சேவையை செய்திருக்கின்றோம்.

அது மட்டுமல்லாமல் நாவற்குழியில் யுத்தத்தினால் சிதைந்து பாழடைந்துகிடந்த பனை ஆராய்ச்சிமையத்தை இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் உதவிகளைப் பெற்று மீண்டும் புதுப்பொலிவுடன் கட்டியெழுப்பி அங்கு பனைசார்ந்த ஆராய்ச்சிகள் நடைபெறவும், பனை உணவு உற்பத்திகள் தரம் நிர்மானிக்கப்படவும் நடவடிக்கை எடுத்திருந்தோம்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனைசார் உற்பத்திப் பொருட்களை தயார் செய்வதற்கான பயிற்சிக் கிராமங்களை உருவாக்கி சுய தொழில் முயற்சியில் எமது மக்கள் மேம்படுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். சுமார் 6000 பேருக்கு சுயபொருளாதாரத்தில் தமது வாழ்வை உயர்த்திக்கொள்வதற்கு பயிற்சிகளை வழங்கியிருக்கின்றோம். “கற்பகம்”விற்பனை நிலையத்தை வாய்ப்பான மாவட்டங்களில் திறந்துவைத்தோம். பனை உற்பத்திகளை“பூட்சிட்டி”போன்ற நவீனகடைத் தொகுதிகளில் காட்சிப்படுத்தி சந்தைவாய்ப்பை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.

எமது செயலாளர் நாயகம் நான்கு தடவைகள் மத்திய அமைச்சராக இருந்து அந்த அமைச்சுக்களின் முழுமையான காலப்பகுதயில் மக்களுக்கு தனது சேவையைச் செய்திருக்கின்றார். அந்த அமைச்சுக்களின் ஊடாக தேசிய அளவில் இன,மத,பிராந்திய வேறுபாடு இல்லாமலும்,அவதூறுகளுக்கு இடமில்லாமலும் நிர்வகித்திருக்கின்றார்.

தமிழ் மக்களின் சாபக்கேட்டுப் பத்திரிகை குறிப்பிட்டிருப்பதைப் போல் அமைச்சுப்பொறுப்பையோ, திணைக்கள அதிகாரங்களையோ நாம் துஷ்பிரயோகம் செய்யவில்லை. நாம் சமூக அக்கறையோடும், அர்ப்பணிப்போடும் சேவையாற்றியதன் காரணமாகவே இன்று நாம் ஆட்சிப் பொறுப்பில் பங்கெடுக்காத போதும், எமது சேவையை பாராட்டுக்களையும், மீண்டும் எமது சேவை தேவை என்று கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கின்ற வகையிலேயே மக்கள் எமது செயலாளர் நாயகத்தை தமது மனதில் நிலை நிறுத்தியிருக்கின்றார்கள் என்பதை எம்மைத் தூற்றுவோரும், எம்மீது அவதூறு சுமத்துவோரும் புரிந்துகொள்ளவேண்டும். எமது செயலாளர் நாயகம் உண்மையாகவும்,நேர்மையாகவும் எமது மக்களுக்கு சேவை செய்வதன் காரணமாகவே அவரைத் தொடர்ந்தும் எமது மக்கள் ஆறாவது தடவையாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பிவைக்கின்றார்கள் என்பதையாரும் மறுக்கவோ,மறைக்கவோமுடியாதவாறுவரலாறுபதிவுசெய்துள்ளது.

ஊடகப் பிரிசு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி


சுன்னாகம் நீர் மாசு விவகாரம்; மல்லாகம் மாவட்ட நீதவான்  வாசஸ்தலத்தில் ஆஜரான ஐங்கரநேசன்!
மூளைக் காய்ச்சல் பரவுவதாக வெளியான தகவலில் உண்மை கிடையாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!
இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் 19 சதவீதமானவர்கள் சிறுவர்கள்!
பொலித்தீன் பாவனைக்கு பதில் வாழை இலை!