நாமல் ராஜபக்ஷ கைது.!

Monday, July 11th, 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவித்துள்ளன.

70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவரை இன்று கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.

ரக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் பெற்றுக்கொண்ட நன்கொடையானது நாமலின் தனிப்பட்டவங்கிக்  கணக்கினூடாக சென்றுள்ளது. இது குறித்த விசாரணைகளுக்காகவே இன்று நாமல் ராஜபக்க்ஷவிசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: