நான் பிரதமராக தகுதியற்றவன்! பணிவுடன் வாய்ப்பை மறுத்தார் ஈழத்தமிழர்!

Thursday, September 29th, 2016

சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

என்னை பற்றி எனக்கு நன்கு தெரியும். எனவே பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. நான் கொள்கை வகுப்பதில் சிறப்பாக செயற்படுவேன். அத்துடன், இளைய சகாக்களுக்கும் பிரதமருக்கும் ஆலோசகனைகளை வழங்கும் தகுதி எனக்கு உண்டு. எனினும் பிரதமர் பதவியை ஏற்க எனக்கு தகுதியில்லை எனக் கருதுகிறேன்.

எனவே, அரசாங்கமானது நாட்டின் வலுவான எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, நீண்டகால அடிப்படையில் சிந்தித்து சிறந்த ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னம் வர வேண்டுமென 69 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

sanmuka-300x200

Related posts:

முதலாவது விளையாட்டு பல்கலைகழகத்தை நிர்மாணிப்பதற்கான அனைத்து பணிகளும் பூர்த்தி - அமைச்சர் டளஸ் அழகப்ப...
வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்...
உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் - கல்வி...