நான் நாட்டை காட்டி கொடுக்கவில்லை ! – ஜனாதிபதி

Tuesday, June 14th, 2016

இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டை காட்டிக் கொடுப்பதாக என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன். உலகில் எந்தவொரு நாடும், எந்தவொரு அமைப்பும் எம் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லையென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

” இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான பயணம் ” எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts: