நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன் – எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தெரியவில்லை – பிரதமர் ரணில் ஆதங்கம்!

Tuesday, May 17th, 2022

நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கரம சிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர் –

 ஶ்ரீ“நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.

எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் என்னால் பங்கேற்க முடியாது ஆளும் கட்சியின் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை.

இன்று நாடாளுமன்றமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளார். அன்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு எதிராக எமது நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எம்முடன் இணைந்து செயற்பட்டார். இப்போது தாக்கப்பட்டுள்ளார். இப்போது பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் ஏன் இந்த பாராளுமன்றத்தை குற்றம் சாட்டுகிறார்கள்.

எல்லோரும் ஒரே நேரம் எழுந்துநின்று பேசும் இந்த நாடாளுமன்றக் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இந்த கலாசாரத்துடன் நாம் முன்னேற முடியாது. முதலில் இதை சரி செய்வோம். இதை மாற்ற இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன். கலாசாரத்தை மாற்றுங்கள். ஏதேனும் கேள்விகள் இருந்தால் பேசலாம். கருத்துக்களை மாற்ற வேண்டாம். கொள்கைகளை மாற்ற வேண்டாம். நீங்கள் பேச விரும்பும் நபருடன் எழுந்துநின்று பேசுங்கள். மற்றவர்கள் அமர்ந்திருக்கட்டும்.

புதிய நாடாளுமன்ற கலாசாரத்தை உருவாக்குவதற்காக நாடாளுமன்ற தேசிய சபையை நிறுவ வேண்டியது அவசியம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: