நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

இலங்கையில் நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்பருவக் கல்விக்கான கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும்.
தேவையின் அடிப்படையில் இடவசதி உள்ள தொடக்க பாடசாலைகளில் முன் குழந்தை பருவ மேம்பாட்டு மையங்களை நடத்தலாம்.
இது மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பாடசாலைகளுக்கு தீர்வாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மாகாண, பிராந்திய, பிரதேச மற்றும் பாடசாலை மட்டங்களில் நியமிக்கப்பட்ட தரவு அதிகாரிகளுக்கு, தேசிய மட்டத்தில் தரவு உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது.
இந்த கற்றல் முகாமைத்துவ முறையை www.dot.moe.gov.lk என்ற இணைய முகவரி மூலம் அணுகலாம். இந்த தரவு அதிகாரிகள் மாகாண கல்வித் திணைக்களங்கள், பிராந்திய கல்வி அலுவலகங்கள், பிரதேச கல்வி அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை உள்ளடக்கியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வழிகாட்டுதல் கொரியா கல்வி மேம்பாட்டு நிறுவனம் (KEDI) மூலம் வழங்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் கல்வி அலுவலக முகாமைத்துவ சேவையொன்றை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|