நான்கு மாதத்தில் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள்!

Thursday, May 3rd, 2018

நாடு முழுவதும் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 7 ஆயிரத்து 178 பேரும், பெப்ரவரி மாதத்தில் 4 ஆயிரத்து 395 பேரும், மார்ச் மாதம் 3 ஆயிரத்து 303 பேரும் ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரத்து 152 டெங்கு தொற்றாளர்களும்இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: