நான்கு சிறுவர்களை தூக்கிச் செல்ல முற்பட்ட கழுகு!
Thursday, August 16th, 2018
அனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த 04 சிறுவர்களில் 7 வயதுடைய சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முற்பட்டபோது கழுகிடம் போராடி சிறுமியின் தாய், குழந்தையை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளார்.
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் போது வானில் இருந்து பறந்து வந்த கழுகு ஒன்று சிறுமியின் முதுகு பக்கத்தில் தாக்கியதால் அவர் காயமடைந்துள்ளார்.
இந்தக் கழுகு, விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்களை நான்கு சந்தர்ப்பங்களில் துரத்தி வந்து தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து கழுகிடம் இருந்து தப்பியுள்ளனர்.
ஆனாலும் பிரதேச மக்கள் இணைந்து கழுகினை பிடித்து வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கழுகின் தாக்குதலுக்குள்ளான சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Related posts: