நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைக்கப்படுகின்றன!
Thursday, January 12th, 2023லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 240 ரூபாய்க்கும், உள்ளூர் சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 5 ரூபாவினால் 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 16 ரூபாயினால் குறைக்கப்பட்டு 189 ரூபாய்க்கும், நாட்டு அரிசி ஒரு கிலோகிராம் 7 ரூபாய் குறைக்கப்பட்டு 198 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
Related posts:
வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் 70 வீதமானோர் வறியவர்கள் !
ஒரே மாதத்தில் இந்திய-சீன தலைவர்கள் மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு!
மக்களையும் சமூகத்தையும் அறிந்திராதவர்களே எம்மீது அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர் - ஈ.பி.டி.பியின் ஊட...
|
|