நான்காம் திகதி மீண்டும் தெரிவுக் குழு கூடும்!
Thursday, May 30th, 2019பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு எதிர்வரும் நான்காம் திகதி மீண்டும் கூட உள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டமானது, குறித்த தினத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ளதாக தெரிவுக்குழுவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 4 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதானி மற்றும் அரச புலனாய்வு துறையின் பிரதானி ஆகியோர் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் சாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வு துறையின் பிரதானியான ஓய்வுபெற்ற சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் தெரிவுக்குழுவில் சாட்சியங்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|