நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Saturday, March 18th, 2023

இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிப்பதற்காக எதிர்வரும் 21 ஆம் திகதி விசேட செய்தியாளர் மாநாடொன்றும் நடத்தப்பட உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ஆகியோரும் இணையவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இந்த வருடத்தின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பபிடத்தக்கது

000

Related posts:


புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்  - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு நீண்டகால திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!