நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை – அரசாங்கம் !

Friday, December 20th, 2019

இலங்கையின் புதிய நிர்வாகம் சாத்தியமான உடன்பாடு குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் ஜனவரியில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்று வருட உடன்படிக்கையின் பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

வெளிநாட்டு செய்தியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியம் இன்னும் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் வரிகளை குறைக்கும் செயற்பாடுகளை உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்குடனேயே மேற்கொண்டு வருவதாகவும் ஜெயசுந்தர தெரிவித்தார்.

Related posts: