நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – மத்தியவங்கி!

Tuesday, January 17th, 2017

தற்போது புழக்கத்திலுள்ள நாணயத்தாள்களை சிறந்த முறையில் பேணுவதற்காக நாட்டில் பயன்பாட்டிலுள்ள நாணயத்தாள்களை சேதப்படுத்தி மாற்றங்களை செய்வோருக்கு எதிராக கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இதற்கென இந்தாண்டு பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நாணய குற்றிகளை வெளியிடுதல் தொடர்பில் முறையாக மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தாண்டில் புதிய நாணய குற்றிகளை வெளியிடவும் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

central-bank-srilanka

Related posts:

வடக்கு மாகாண சபையே முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வேண்டுமென்று தடுக்கிறது - M.P.சுமந்திரன்!
கொரோனா வைரஸ்: முக பாதுகாப்பு கவசம் அணியும் அளவிற்கு இலங்கையில் தாக்கம் இல்லை - அரச வைத்திய அதிகாரிக...
இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்குவதை கண்காணிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் தீவிரமா...