நாட்டை மோசமாக சித்தரிக்கும் ஊடகங்கள் – ஜனாதிபதி குற்றச்சாட்டு!

Tuesday, July 30th, 2019

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கும் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மாலையில் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்தால் நாடு ஒன்று இருக்கின்றதா? என்று சிந்திக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் இந்த செய்திகள் இன்று நேற்று அல்ல. பல நாட்களாக இவ்வாறுதான் இடம்பெற்று வருகின்றன.

மிகவும் மோசமான, நாகரீகமற்ற சமூக செயற்பாடுகளை தொலைக்காட்சிகள் இவ்வாறு வெளிப்படுத்தி வருகின்றன.

இருப்பினும், ஊடகங்கள் காட்டும் நிலையில் அல்ல நாடு காணப்படுவதாகவும் அதனை விட சிறந்த நிலையில் உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts: