நாட்டை முழுமையாக முடக்காமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

கொரோனா பரவலுக்கு மத்தியில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பானது இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளதாகக் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டை முழுமையாக முடக்காது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன
அதேநேரம், நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்குவதைக் கட்டாயமாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் தற்போது 11 ஆயிரத்து 928 கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் கோவிட் தொற்றாளருடன் நெருங்கி செயற்பட்டவர்களை பரிசோதனை செய்து அதற்கான அறிக்கை எதிர்வரும் 2 நாட்களுக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார பணியகத்தின் இயக்குனர் வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் தற்போதைய நிலைமையின் கீழ் மேற்கொள்ள வேண்டிய மேலதிக திட்டங்களை நடைமுறைப்படுத்த விசேட கூட்டம் இன்று இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|