நாட்டை முடக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை; இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021

நாடளாவிய ரீதியில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று காணப்படுகின்ற போதிலும், நாட்டை முடக்குவதற்கோ அல்லது பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தவோ இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என கொரோனா செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதாகவும். ஒவ்வொரு வாரமும் கொரோனா செயலணிக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “நாளாந்தம் வைத்திய அதிகாரிகளை நாம் சந்தித்து கலந்துரையாடியும் வருகின்றோம். அதேநேரம் தற்போது நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்து.

Related posts: