நாட்டை மீள திறப்பதற்கு முன்னர் பொதுப்போக்குவரத்து தொடர்பான உரிய திட்டமிடல் அவசியம் – இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்து!

Monday, September 6th, 2021

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மீள நாடு திறக்கப்படுமாயின் அதற்கு முன்னர் பொதுப் போக்குவரத்துக்கான தீர்மானமிக்க வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அதன் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துட்ன இவ்வாறு இடம்பெறாவிடத்து நாடு மீள பிரச்சினைக்குள் செல்ல நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டில் தொற்று வேகமாக பரவுவதற்கு பொதுப்போக்குவரத்து சேவை காரணமாக உள்ளது.

இந்தநிலையில் மக்கள் ஒன்று கூடுவதையும், தொற்று பரவுவதையும் தடுக்கும் வகையில் இந்த செயற்பாடு அமைய வேண்டும்.

நாடு மீள திறக்கப்படுவதற்கு முன்னர் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வைத்தியர் பத்மா குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மக்கள் ஒன்றுகூட கூடிய இடங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: