நாட்டை இயல்புக்கு கொண்டு வரும் செயற்பாட்டின் கீழ் அரச , தனியார் பிரிவுகளின் சேவைகள் திங்கள்முதல் ஆரம்பம்!

Friday, May 8th, 2020

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் நாட்டை இயல்புக்கு கொண்டு வரும் செயற்பாட்டின் கீழ் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய சேவைகளை வழங்குமாறும். இது தொடர்பான நடைமுறை குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள் கடமைகளுக்கு சமுகமளிப்பதற்காக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு பிரதி பொதுமுகாமையாளர் ஏ.எச்.பண்டுக தெரிவித்துள்ளார்.

அந்தந்த நிறுவனங்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய பிரதான வீதிகள் சிலவற்றில் பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் புகையிரத போக்குவரத்து தொடர்பில் இன்றையதினம் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்ட புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

Related posts:

இன்றுமுதல் நாடு முழுவதும் வழமைக்க திரும்’பியது பொதுப் போக்குவரத்து –அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்ப...
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்!
செப்டெம்பர் ஒன்றுமுதல் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதி - சுற்றுலாத்துறை அமைச்சு...