நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல – பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவிப்பு!.

Friday, April 26th, 2024

நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

சிறப்புப் பயிற்சி பெற்ற 100 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட 50 மோட்டார் சைக்கிள் குழுக்கள் கட்டுகுருந்த விசேட படைப் பயிற்சி முகாமில் 02 வார பயிற்சியை நிறைவு செய்து விசேட அதிரடிப்படை மோட்டார் சைக்கிள் குழுக்களுடன் இணைந்து செயற்படும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸாரால் இந்நாட்டில் சிறப்பாக செயற்பட முடியும் என்றும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தில் இருந்து நம் நாட்டை காப்பாற்றவே நீதி நடவடிக்கையை தொடங்க காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் அனைவரும் அச்சமின்றி இலக்கை நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் அவசரகாலத்தில் துப்பாக்கியை உபயோகிக்க நேரிட்டால், அதைப் பயன்படுத்துங்கள். நாங்கள் உங்களுக்காக நிற்கிறோம். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: