நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Tuesday, October 13th, 2020

நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ஏனையவர்களுக்கு இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து கருத்து வெளியிடும்போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது பரவிவரும் வைரசை ஆராய்ந்துள்ள விசேட நிபுணர்கள் இந்த வைரஸ் மிக அதிகளவான பரவும் தன்மை கொண்டது என எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடித்து வைரஸினை உருவாக்ககூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்களை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: