நாட்டை அச்சுறுத்திய மர்ம சாவுக்கான  காரணம் கண்டுபிடிப்பு!

Tuesday, September 20th, 2016

சீகா வைரஸ் காய்ச்சல், இதுவரை இலங்கையில் எவருக்கும் தொற்றவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பீ.ஜி.மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிலாபம் – நல்லரசன்கட்டு பகுதியில் உயிரிழந்த இருவரும் ஒருவகை வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுகாதாரக் கல்விப் பணிமனையில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார், தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

‘வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்களாலேயே, நாட்டுக்குள் சீகா வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளது. சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் சீகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை.

மாறாக, அவர்கள் யாத்திரைக்கென இந்தியாவின் புதுடெல்லிக்குச் சென்றிருந்தபோது, வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இன்புளுவன்சா ‘ஏ’ வைரஸ் காய்ச்சலானது, நாட்டில் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இன்புளுவன்சா ‘பீ’ வைரஸ் காய்ச்சலினால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சீகா வைரஸ் காய்ச்சல் காரணமாக எமது நாட்டில் நோயாளர்கள் இன்னமும் இனங்காணப்படவில்லை.

குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, பிரேஸில் போன்ற நாடுகளிலும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோர் தொடர்பில், அவதானமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் விமான நிலையங்களிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

h1n1-influenza-061215-620x350

Related posts: