நாட்டு மக்களுக்கு விரைவில் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

இன்னும் சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார்
அத்துடன் இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் வேகமும் முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாட்டில் தற்போது 20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்னும் சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை மக்களுக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் விஜேசூரிய கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|