நாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

கொழும்பில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி, வான், மோட்டார் சைக்கிள்கள் சுற்றி திரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அலுமினிய தகடுகளால் சுற்றப்பட்ட நிலையில் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட லொறி மற்றும் வான் ஒன்று கொழும்பில் சுற்றித் திரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மூன்று மோட்டார் சைக்கிள்களும் சுற்றித் திரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாட்டு மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக பொலிஸாரினால் துறைமுகத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணி புரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் துறைமுக அதிகார சபையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|