நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!

Friday, August 20th, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்றிரவு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்ற உள்ளார் என தேசிய நாளிதழ்களில் வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவித்த அவர் –

கொரோனா பரவல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிக்கல் நிலை என்பன தொடர்பில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளதாக தேசிய நாளிதழ்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேநேரம், ஜனாதிபதி நாளையதினம் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து, நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகவும் அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: