நாட்டுக்கு தேவையான பசளையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எட்டு நாடுகளிடம் கோரிக்கை – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, June 1st, 2022

இலங்கைக்கு தேவையான பசளையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எட்டு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பின்போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கூறுகையில் –

தற்போதைக்கு இலங்கைக்குத் தேவையான 65 ஆயிரம் மெட்ரிக் தொன் உரத்தை வழங்குவதாக இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது.

அதற்கும் மேலதிகமாக மேலும் எட்டு நாடுகளுடன் உரம் பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே விவசாயிகள் உரம் கிடைக்கும் வரை காத்திருக்காமல் பயிர்ச்செய்கையை ஆரம்பியுங்கள்.

இரசாயன அல்லது கார்பன் உரம் ஏதாவதொன்று உங்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை போதுமான அரசி தற்போது கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கூறுகையில், தற்போதைக்கு இலங்கையின் கையிருப்பில் இருக்கும் அரிசி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை பொதுமக்களின் நுகர்வுக்குப் போதுமானதாக இருக்கும்.

அதன் பின் சுமார் ஏழு இலட்சம் தொன் அளவிலான அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். எனினும் அதற்குள் நிலைமைகள் மாற்றமடையும் சாத்தியம் உண்டு.

அத்துடன் பொதுமக்கள் தற்போதைக்கு தங்களால் முடிந்த மட்டிலும் சிறுதானிய பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு எதிர்கொள்ளக் கூடிய உணவுப்பற்றாக்குறையை போக்கிக் கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: