நாட்டுக்கு தனியார் உயர்கல்வி அவசியம் – உயர்கல்வி அமைச்சர்!

நாட்டிற்கு தனியார் உயர்கல்வி அவசியமானதென்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலபதி நாடாளுமன்றத்தில் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
வாய்மூலம் கேள்வியொன்றை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண வெளிவாரி பட்டப்படிப்பை இரத்துச் செய்யவேண்டும் என்பதல்ல அதன் தரம் தொடர்பில் கேள்வி உண்டு. வெளிவாரி பட்டப்படிப்பின் மூலம் குறுகிய காலத்தில் பட்டத்தை பெறுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றதா என்று கேட்க விரும்புகின்றேன் என்றார்.
இதற்குப் பதிலளித்த லக்ஸ்மன் கிரியெல்ல சுதந்திரக் கல்விக்கு இடமிருக்க வேண்டும். பொருளாதாரம் வலுவடைந்தால் பட்டம் ஒன்று பெற்றுக்கொள்ளும் தேவை ஏற்படும். அதனை இல்லாது செய்யக்கூடாது. இருப்பினும் வெளிவாரி பட்டப்படிப்பு கற்கைநெறியின் தரம் குறைவானது.
அனைத்து பட்டதாரிகளும் அரசாங்க தொழிலையே விரும்புகின்றனர். இதனால் தனியார்துறை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் உண்டு. அதற்கு எவரும் செல்வதில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|