நாட்டில் 365 நாட்களுள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி – அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல்!

2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி வரையான ஒரு வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் திவுலபிட்டிய, பேலியகொடை, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொத்தணி என நான்கு பிரதான கொத்தணிகளில் இந்த எண்ணிக்கையான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதனடிப்படையில் நேற்றுவரையில் இந்த பிரதான கொத்தணிகள் ஊடாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 2 ஆயிரத்து 817ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன நேற்றையதிம் 2 ஆயிரத்து 510 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டின் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 11 ஆயிரத்து 349ஆக அதிகரித்துள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|