நாட்டில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்!

Saturday, December 16th, 2017

இலங்கையில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் காணப்படுகின்றனர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.போலி வைத்தியர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, குறித்த நடவடிக்கைக்கு பொலிசாரின் உதவியை நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் சுமார் 15 ஆயிரம் உத்தியோகப்பூர்வ வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர். இவ்வாறு கடமையறாற்றும் உத்தியோகப்பூர்வ வைததியர்கள் பதிவுகளை மேற்கொள்வார்களாயின் போலி வைத்தியர்களை இலகுவாக கண்டறிய முடியும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: