நாட்டில் 21,000 சிறுவர்கள் மந்தபோசனையால் பாதிப்பு – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Wednesday, November 30th, 2022தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய நாட்டில் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ள 21 000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த எண்ணிக்கை 40 ஆயிரம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற உணவு விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர் மிகவும் பாதிப்படைந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்
எனவே, இந்த விடயம் தொடர்பில் முழுமையான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|