நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தகவல்!

நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் இந்த ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரொன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய நாளில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 644 பேருக்கு, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பைஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 40 இலட்சத்து 6 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் 922 பேருக்கு பைஃஸர் முதலாம் தடுப்பூசியும் ஆயிரத்து 368 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், 596 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் ஆயிரத்து 673 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|