நாட்டில் முழுமையாக சிமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் நிர்மாணத்துறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சிமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்காலத்தில் நாட்டுக்குள்ளேயே முழுமையான சிமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எவையும் சந்தையில் காணப்படவில்லை எனவும் மருந்துப் பொருட்கள் தவிர்ந்த பல பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு தேவையற்ற பயன்களை அடைய முயற்சிக்க வேண்டாமென்றும் வர்த்தகர்களிடம் நிதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
2019 ஆம் ஆண்டில் அறநெறி கல்வி கட்டாயம்!
எதிர்வரும் திங்கள்முதல் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
எரிபொருள் வழங்கலில் முறைகேடா - பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்!
|
|