நாட்டில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும் – மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம்!

நாட்டில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிப்பு நாட்டின் பல பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அதிகளவான வெப்பம் காரணமாக, மக்களின் மின்சார பாவனை அதிகரித்துள்ளது. அதேவேளை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அத்துர வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 10 வருடங்களின் பின்னர் 31 வீதம் வரை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம், மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Related posts:
யாழ் மாநகரின் நிர்வாகத்தில் யாரும் தலையிட முடியாது - ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் றெமீடியஸ்!
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்!
உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!
|
|