நாட்டில் முதல் முறையாக சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!

Friday, September 24th, 2021

நாள்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று காலைமுதல் ஆரம்பமாகியுள்ளன.

இதேநேரம் சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளானது, மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி, 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, நாள்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும்.

15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தக்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்படும்.

இதனையடுத்து, 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட ஏனைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம், மூன்றாவது படிமுறையாக, விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தெர்டர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல –

குறிப்பாக 12 முதல் 19 வயதுடைய பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள், சுகாதார மற்றும் கல்வித் துறையின் அறிவுறுத்தல்களுக்கமைய விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இவ்வாறான குழந்தைகள் அதிகமாக காணப்படும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இந்த தடுப்பூசி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி இதற்கு முன்னதாக அறிவுறுத்தினார்.

அதற்கமைய சிறுவர் வைத்தியசாலையான றிட்ஜ்வே வைத்தியசாலையில் இன்று குறியீட்டு ரீதியாக இந்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

விசேட தேவையுடை மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு எதிர்காலத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஃபைஸர் தடுப்பூசி வழங்குவதற்கு நாம் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: