நாட்டில் மீண்டும் திடீர் மின்தடை ஏற்படலாம் – இலங்கை மின்சார சபை பணிப்பாளர் அறிவிப்பு!

Tuesday, August 18th, 2020

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய மின்னோட்ட கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் சில பிரதேசங்களில் திடீர் மின்தடை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –

நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்சார கோளாரை தொடர்ந்து நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையமானது செயலிழந்துள்ளது.

நுரைச்சோலை மின்நிலையத்தில் நேற்று உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் தேசிய மின்சுற்றோட்ட கட்டமைப்புடன் இணைக்கப்படாததால் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த மின்நிலையத்தில் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

இதனால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய மின்னோட்ட கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் சில பிரதேசங்களில் திடீர் மின்தடை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: